நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் “ராமம் ராகவம்” இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக வலம் வரும் தன்ராஜ் இயக்குகிறார்.
‘ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ்’ பேனர் பிரபாகர் ஆரிபாகா வழங்க , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, இருமொழி திரைப்படமாக இப்படத்தை
இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து நடிக்கவும் செய்கிறார்.
அப்பா மகன் உறவு கதைக்களமாக இந்தபடம் இருக்கிறது .
தெலுங்கு திரையுலகில் தற்பொழுது பிசியான நடிகராக வலம் வரும் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு ஐதராபாத், ராஜமுந்திரி சென்னை, மதுரை , தேனி, திண்டுக்கல் … போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
கதை : சிவ பிரசாத் யானல -ஒளிப்பதிவு -துர்கா பிரசாத் கொல்லி, இசை -அருண் சிலுவேறு, கலை -டெளலூரி நாராயணன், Executive producer –
தீபி ரெட்டி மஹிபால் ரெட்டி , எடிட்டிங் -மார்த்தாண்டம் கே வெங்கடேஷ், சண்டைபயிற்சி -நட்ராஜ், வசனம் -மாலி திரைக்கதை இயக்கம் –
தன்ராஜ் கொரனாணி. தயாரிப்பு -பிருத்வி போலவர