பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்விடை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபமாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படகுழுவினர் பேசியதாவது
இயக்குநர் பிராஷ் பேசும்போது,
நேற்று என் படத்தின் ட்ரைலரை முதன் முதலாக பிரசாத் லேப் தியேட்டரில் செக் பண்ணும்போது பார்க்கையில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். ஊரில் எனது அம்மா பெயரில் ஒரு திரையரங்கம் இருந்தது. என் அப்பாவை சிலர் ஏமாற்றி விட்டார்கள். அந்த திரையரங்கத்தை அபகரித்துக்கொண்டார்கள். ஆனாலும் நான் சினிமாவை விடவில்லை. சினிமா என்னைக் கைவிடவில்லை. பெற்றோருக்கு தெரியாமல் சினிமாவை கற்றுக் கொண்டேன். இருப்பினும், கடலோர காவற்படையில் தேர்வானேன். அதிக நாட்கள் சென்னையில் தான் இருந்தேன். கப்பல்படை, விமானப்படை, தரைப்படை என மூன்று படைத்தளங்களிலும் பணியாற்றிய அதிர்ஷ்டசாலி நான் என்று நினைக்கிறேன்.
போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆபரேஷன் அரபைமா வாகத்தான் இருக்கும். நாம், இப்படத்தை கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் மூலம் எடுத்திருக்க முடியும். ஆனால், உண்மையான கப்பல்களை காட்டும் அழகு வராது. ஆனால், அந்த சவால்களையும் செய்துள்ளோம். கடலில் ஒரு காட்சியை படம் பிடிப்பது கடினம். கடல் சீற்றம், காற்று என அனைத்தையும் கணித்து படம் பிடிக்க வேண்டும். நாங்கள் அதை செய்துள்ளோம்.
17 லொகேஷன்களை இப்படத்தில் காட்டியுள்ளேன். நம் நாட்டிற்கு புதியதாக அறிமுகமாகவிருக்கும் போதை பொருளின் பாதிப்பை சொல்லும் படம் தான் இது.
இப்படத்தில் நாயகனுக்கு காதலிக்கவே நேரமில்லை. ஆனால், வில்லன் காதலிக்கிறார், அவருடைய தம்பி ரொமான்ஸ் செய்கிறார். நிச்சயமாக படம் உங்களுக்குப் பிடிக்கும். மற்றபடி நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லவேண்டும். அதற்காக நான் காத்திருக்கிறேன் என்றார்.
நடிகை நேஹா சக்ஸேனா பேசும்போது
நடிகர் டினி டாம் பேசும்போது
தமிழில் இது எனக்கு முதல் படம். அனைத்து நடிகர்களுக்கும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். காரணம், தமிழ் தான் உலகின் பழமையான மொழி.
இப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவைத் தந்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.
இணை தயாரிப்பாளர் ஜெயின் ஜார்ஜ் பேசும்போது,
போதை பொருள் கும்பலிடம் இருந்து இளைஞர்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் இப்படத்தின் கதை. இப்போது இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இங்கே நிற்கிறேன். விரைவில் உங்கள் நடிகனாக நிற்கவேண்டும் என்பது என் ஆசை என்றதும் விழாவும் ஒரு குரூப் போட்டோ க்ஷெனுடன் இனிதே நிறைவுற்றது.