Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், இரட்டை இயக்குனர்கள் PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘தீர்க்கதரிசி’.
விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை , ஊடக நண்பர்கள் முன்னிலையில் சமீபமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் … இப்படக்குழுவில் இடம்பெற்றுள்ள பலரும் ‘தீர்க்கதரிசி’ படம் பற்றி பேசினர்.
இப்படத்தில் நடித்துள்ள நடிகர் ஜெய்வந்த் பேசியதாவது..
“சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது எனக்கு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜெய்வந்த், துஷ்யந்த் மற்றும் நான் இணைந்து ஒரு குழுவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் இயக்குநர் கதை கூறும்போதே இப்படத்தில் நாம் இருக்க வேண்டும் …. என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இந்த படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அது உங்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். நீங்கள் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு தர வேண்டும். நன்றி“
இப்பட இரட்டை இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் PG மோகன் கூறியதாவது..,
“இது எங்களது முதல் படம், மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். படம் கண்டிப்பாக உங்களுக்குப்பிடிக்கும் படமாக இருக்கும், இதற்கு உங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. “
இப்பட இரட்டை இயக்குநர்களில் மற்றொருவரான LR சுந்தரபாண்டி பேசியதாவது..,
நடிகர் சத்யராஜ் கூறியதாவது..,
“இது போன்ற சிறிய படங்கள் செய்யத் தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இந்த இயக்குநர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கன்டெண்ட் சிறப்பாக இருந்தால், வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கன்டெண்ட் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி என்று பேசிட விழா இனிதே நிறைவுற்றது .
முன்னதாக ‘ தீர்க்கதரிசி’ படம் குறித்து இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி , ஆர்.வி.உதயகுமார் , பேரரசு , நடிகர்கள் நாசர் , ராம்குமார் சிவாஜி … உள்ளிட்டோரும் சிலேகித்து பேசியது குறிப்பிடத்தக்கது.