ஆர் கே சுரேஷ் நடிக்க உருவாகி உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘விசித்திரன்’. இப்படம் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு
ப்ரத்யேகமாக திரையிடப்பட்டது.
‘விசித்திரன்’ படத்தை பார்த்த பிறகு பேசிய இயக்குனர் சீனு ராமசாமி,
எப்போதும், படைப்பாளிகளிடம் திரையிடும் படத்தை பற்றி அவர்கள் முதலில் முன் வைப்பது விமர்சனத்தையும், கேள்வியையும் தான். அதன் பிறகு தான் பாராட்டு என்பது கூட. அதனால் நான் எப்போதுமே என் படத்தின் பர்ஸ்ட் காபியை எனது துணை இயக்குனர்களிடம் காண்பிக்க மாட்டேன். அவர்கள் பல கேள்விகளை முன்னவைப்பார்கள் என்பதே காரணம். அவர்களுக்கு எப்போதுமே இறுதியில் தான் திரையிடுவேன்.
இது போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுத்து, இயக்குனருடன் இணைந்து கடினமாக உழைத்து தன்னுடைய மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்த நடிகர் ஆர் கே சுரேஷுக்கு தமிழ் சினிமாவில் ஒளி மயமான எதிர்காலம் இருக்கிறது என்பதை என்னால் ஆழமாக உணர முடிகிறது.
இது மெதுவாக சூடு பிடிக்கும் ஒரு கதைக்களத்தை கொண்ட ஒரு திரைப்படம். இது போன்ற படங்களை நம் தமிழ் ரசிகர்கள் பார்த்து பழக்கப்பட்டதில்லை. ஆர் கே சுரேஷ் போன்ற இளைஞர்கள் அவர்களின் நடிப்பை வெளிப்படுத்த இது போன்ற படைப்புகளை கையில் எடுத்தால் மட்டுமே அது சாத்தியம்.
இந்த தாக்கத்தின் காரணமாக நான் , இயக்குனர் அண்ணன் ஆர் வி உதயகுமாரிடம் இப்படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறினேன். இன்றைக்கு ஒரு படம்முதல் மூன்று நாட்கள் திரையரங்குகள் நிரம்ப ஓடினால் அது தான் அந்த படத்திற்கான வெற்றி. பூ, பிஞ்சி,கனி, போன்ற படங்களுக்கு இப்போது இடமில்லாமல் போனது.
அன்னக்கிளி 7 நாட்கள் கழித்து ஓடியது, 16 வயதினிலே பத்து நாட்கள் கழுத்து ஓடியது என்பதெல்லாம் இப்போது கிடையாது. ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது முதல் மூன்று நாட்கள் மட்டுமே.
இந்த படம் குறித்து நான் இரண்டு விமர்சனங்களை மட்டுமே ஆர் கே சுரேஷிடம் கூறினேன்.மேலும், இந்த படத்தை பார்த்த அனைத்து படைப்பாளிகளும் இந்த படத்தை பற்றியான விமர்சனத்தை நல்ல முறையிலோ, அல்லது குறைகளை சுட்டி காட்டியோ தங்களின் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓரிரு வார்த்தைகள் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தின் வெற்றியில் தான் தமிழ் சினிமாவின் நாகரிகம் அடங்கியுள்ளது என நம்புகிறேன், என்றார்.
அடுத்து,
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி பேசுகையில்,
தன்னையே விதையாக்கி , ஒரு மரமாக முளைக்க செய்யும் முதல் முயற்சிதான் இந்த சினிமா. அதில் தன்னை முழுமையாக ஒப்படைத்து இவ்வளவு சிறப்பாக அனைவரும் வியக்கும்படி நடித்த ஆர்.கே.சுரேஷ் ஒரு சிறந்த நடிகராக தன்னை பதிவு செய்து இருக்கிறார்.
இந்தப் படத்துக்கு மரணம் இல்லை. காலத்துக்கும் பெயர் சொல்லும் படைப்பு இது. இந்தப் படத்தை பார்க்காதவர்கள் துரதிருஷ்டசாலி. ஆகவே, அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். ஆர்.கே.சுரேஷூக்கு என் தனிப்பட்ட பாராட்டுகள், என்றார்.
இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரான இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில்,
‘விசித்திரன்’ என்ற இந்த படத்தை பார்த்து இரண்டு நாளாக நான் தூங்கவில்லை எனத் தலைவரிடம் சொன்னேன். உடனே மற்றைய உறுப்பினர்களுக்காக சிறப்புக் காட்சியை தயார் செய்ய சொன்னார். அந்த ஏற்பாட்டின்படி இன்று நாம் அனைவருமே படத்தைப் பார்த்துவிட்டோம். என்னைப் போலவே உங்களுக்குள்ளும் இந்தப் படம் பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள் என்றார்.
அதன் பின்னர் .,
இயக்குனர் சரவண சக்தி பேசியபோது,
அதற்கு முன் “ஜோசப்” படத்தை பார்த்துவிட்டு இந்த படம் சிறிது மெதுவான கதைக்களத்துடன் நகர்கிறதே எப்படி சமாளிக்க போகிறாய் ? என்றபோது இல்லை இந்த படம் என் நடிப்பிற்கு மிக பெரும் வெற்றியையும் பெருமையையும் சேர்க்கும் என்று ஆர் கே சுரேஷ் அவர் நடிப்பின் மீது வைத்த நம்பிக்கை ,வீண் போகவில்லை என்பதை படத்தை பார்த்தபோது புரிந்துகொண்டேன்.
எப்போதுமே சமூக பிரச்சனையை பேசும் படம் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்று தருமா ?என அச்சம் இருக்கும் ஆனால் அதை கடந்து இன்று சாதித்திருக்கும் என் நண்பன் ஆர் கே சுரேஷுக்கு பாராட்டுக்கள் என்றார்.
இவ்வாறு., படம் பார்த்த இயக்குனர்கள் அனைவரும் ‘விசித்திரன்’ படத்தையும் அதில்., ஆர்.கே.சுரேஷின் விருதுகளை குவிக்க இருக்கும் நடிப்பையும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர் என்றால் மிகையல்ல !